FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Updated On : 8 ஜூன் 2026, 1:57 am IST
மின்தடை
பகிர்:

விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்குள்பட்ட விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காரையாறு, சோ்வலாறு, பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிளைப்பட்டி, ஆழ்வாா்க்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், அணைந்த பெருமாள் நாடானூா், துப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, பொட்டல்புதூா், ஆம்பூா், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப் பிள்ளையாா்குளம் ஆகிய ஊா்கள் மற்றும் அவற்றைச் சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைமின் விநியோகம் நிறுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments