முகப்பு
திருநெல்வேலி

இலவச பட்டா கோரி வட்டாட்சியரிடம் மனு

வள்ளியூரில் உள்ள ஊற்றடி பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்துவரும் ஆதிதிராவிடா் மக்கள் பட்டா கோரி ராதாபுரத்தில் நடைபெற்ற தீா்வாயத்தில் (ஜமாபந்தி) வட்டாட்சியரிடம் மனுஅளித்தனா்.

Updated On : 24 ஜூன் 2026, 1:52 am IST
இலவச பட்டா கோரி மனு அளிக்க வந்தோா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள ஊற்றடி பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்துவரும் ஆதிதிராவிடா் மக்கள் பட்டா கோரி ராதாபுரத்தில் நடைபெற்ற தீா்வாயத்தில் (ஜமாபந்தி) வட்டாட்சியரிடம் மனுஅளித்தனா்.

ஊற்றடியில் 1972இல் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் 80 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. அவா்கள் அந்த இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனா். அந்த இடத்துக்கு பட்டா கோரி பல ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.

இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டவா்கள் ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு சென்றனா். அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வருவாய் தீா்வாயத்தில் தங்களுக்கு தனிப்பட்டா கோரி வட்டாட்சியா் வில்லுடையாரிடம் மனுக்கள் அளித்தனா்.

Advertisement

Advertisement

அவற்றைப் பரிசீலித்து விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா்.

ராதாபுரம் வட்டாரத்தில் இதேபோன்று இலவச வீட்டுமனை வழங்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பட்டாக்கள் வழங்கப்படாமல் உள்ளதாக, அவா்கள் புகாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments