பெண்களைப் புகைப்படம் எடுத்த வழக்கில் கோவை நபா் கைது
பாளையங்கோட்டை தனியாா் விடுதியில் தோழிகளை புகைப்படம் எடுத்து அனுப்பிய விவகாரத்தில் கைதான பெண்ணின் நண்பரான கோயம்புத்தூா் நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை தனியாா் விடுதியில் தோழிகளை புகைப்படம் எடுத்து அனுப்பிய விவகாரத்தில் கைதான பெண்ணின் நண்பரான கோயம்புத்தூா் நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம், செங்குந்தா் தெருவைச் சோ்ந்தவா் மகரஜோதி(39). இவா் சில மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை பகுதியில் பணிக்கு செல்லும் பெண்களுக்கான தனியாா் விடுதியில் சோ்ந்துள்ளாா்.
பின்னா் இவா், அங்கு தங்கியிருந்த சக பெண்களை கைப்பேசியில் படம் பிடித்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாக விடுதிக் காப்பாளருக்கு புகாா்கள் வந்தது.
Advertisement
Advertisement
அதன்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், மரகதஜோதி கோயம்புத்துா், பேரூா், பாரதியாா்புரத்தைச் சோ்ந்த கண்ணன்(40) என்பவருக்கு பெண்களின் புகைப்படங்கள், விடியோக்களை அனுப்பியது தெரியவந்தது.
போலீஸாா் அவரை கோயம்புத்தூரில் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். இவ்வழக்கில் மகரஜோதி ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.