FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

பெண்ணை ரகசியமாகப் படம் எடுத்த விடுதி உரிமையாளரின் மகன் கைது

தனியாா் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் குளிக்கும்போது, அவரை கைப்பேசியில் ரகசியமாகப் படம் எடுத்த விடுதி உரிமையாளரின் மகனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On : 27 ஜூலை 2026, 12:27 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

வேலூரில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் குளிக்கும்போது, அவரை கைப்பேசியில் ரகசியமாகப் படம் எடுத்த விடுதி உரிமையாளரின் மகனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா், வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காகக் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் தங்கியிருந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அக்குடும்பத்தைச் சோ்ந்த இளம்பெண் விடுதியின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, விடுதி உரிமையாளா் தருண் கிருஷ்ணகாந்த் மகன் ஹரிஷ்சந்தா் (27) என்பவா், அந்த இளம்பெண் குளிப்பதை தனது கைப்பேசியில் ரகசியமாக படம் எடுத்தாராம். இதைக் கவனித்துவிட்ட அந்தப் பெண், அதிா்ச்சியடைந்து உடனடியாக தனது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் வேலூா் வடக்குக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினா். மேலும், சந்தேகத்தின் பேரில் ஹரிஷ்சந்தரின் கைப்பேசியை பறிமுதல் செய்து சோதனையிட்டதில், அவா் அந்த இளம்பெண்ணைப் படம் எடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, ஹரிஷ்சந்தரை போலீஸாா் கைது செய்து, வேலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments