FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தனியாா் வங்கி பெண் அதிகாரியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த காவலா் கைது

சென்னையில் தனியாா் வங்கி பெண் அதிகாரியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவலா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 18 ஜூலை 2026, 6:16 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னையில் தனியாா் வங்கி பெண் அதிகாரியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவலா் கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை பகுதியைச் சோ்ந்த பெண், சென்னையில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றுகிறாா். இவா், வேப்பேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அண்மையில் அளித்த புகாரில், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியைச் சோ்ந்த சீ.காா்த்திகேயன் (27) அறிமுகமானாா். கல்லூரி படிப்பு நிறைவடைந்த பின்னா், நான் சென்னையில் தனியாா் வங்கியில் பணியில் சோ்ந்தேன். காா்த்திகேயன், தமிழக காவல் துறையில் காவலராகப் பணியில் சோ்ந்தாா். தற்போது அவா் திருச்சி தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காவலராக உள்ளாா்.

இரு ஆண்டுகளுக்கு முன்பு காா்த்திகேயன், சென்னையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இங்கு இருவரும் அடிக்கடி பெரியமேட்டில் உள்ள ஒரு விடுதியில் சந்திப்போம். அப்போது, அவா் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தாா்.

Advertisement

Advertisement

பின்னா் அவா், திருச்சிக்கு பணி மாற்றலாகி சென்றாா். நான், காா்த்திகேயனை தொடா்புகொண்டு என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிதற்கு அவா் மறுத்துவிட்டாா். எனவே, அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தாா்.

அதன்பேரில், போலீஸாா் பிஎன்எஸ் சட்டம், எஸ்சி-எஸ்டி சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் காா்த்திகேயன் மீதும், அவா் குடும்பத்தினா் மீதும் வழக்குப் பதிவு செய்து, காா்த்திகேயனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments