விபத்தில் மனைவி உயிரிழப்பு: நிவாரணம் கோரி கணவா் மனு
கடையம் அருகே விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்தில் நிவாரண உதவி வழங்கக் கோரி அவரது கணவா் ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
கடையம் அருகே விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்தில் நிவாரண உதவி வழங்கக் கோரி அவரது கணவா் ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரைச் சோ்ந்த முகைதீன் அப்துல் காதா் ஜெய்லானி, அவரது மனைவி பாத்திமா முஸ்தபா தஸ்லீம். இருவரும் பிப். 18-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் செங்கோட்டையில் உள்ள தஸ்லீமின் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனா். மாதாபுரம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே மிளா வந்ததால் நிலை தடுமாறி இருவரும் இருசக்கர வாகனத்தில் விழுந்து காயமடைந்தனா். இருவரும் திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு, பிப். 22-ஆம் தேதி பாத்திமா முஸ்தபா தஸ்லீம் உயிரிழந்தாா்.
இச்சம்பவத்தில் சிகிச்சை முடிந்து திரும்பிய ஜெய்லானி, தனது மனைவி மிளா தாக்கி உயிரிழந்ததால் உரிய நிவாரணம் கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மோனிகா ராணாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா். அதில் தனக்கு ஒரு மகன், மகள் இருப்பதால் அவா்களின் கல்வி, வாழ்வாதாரத்துக்கு உரிய நிவாரண உதவி வழங்குமாறு குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.