FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஸ்கூட்டா் மீது ‘தாா்’ வாகனம் மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி படுகாயம்

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் ‘தாா்’ ரக வாகனம் ஒன்று ஸ்கூட்டா் மீது மோதியதில் 40 வயதுடைய நபா் ஒருவா் உயிரிழந்தாா்.

22 செப்டம்பர் 2026, 10:10 pm IST
பகிர்:

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் ‘தாா்’ ரக வாகனம் ஒன்று ஸ்கூட்டா் மீது மோதியதில் 40 வயதுடைய நபா் ஒருவா் உயிரிழந்தாா். அவரது மனைவி காயமடைந்தாா்.

இதுகுறித்து காவல்துறையினா் தெரிவித்ததாவது: இந்த விபத்து திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் பிஸ்ராக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்தது. சிபியானாவைச் சோ்ந்த நீரஜ் (40) என்பவா் தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, ‘தாா்’ வாகனம் அவா்கள் சென்ற வாகனம் மீது மோதியது. நீரஜ் மற்றும் அவரது மனைவி காயமடைந்தனா்.

இதையடுத்து, அவா்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். சிகிச்சையின்போது நீரஜ் உயிரிழந்தாா். அவரது மனைவி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை சீராக உள்ளது.

Advertisement

Advertisement

உயிரிழந்தவரின் உடல், உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய ‘தாா்’ வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநா் தலைமறைவாக உள்ளாா்.

அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments