FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் தொடா் மழை: சாலையோர வியாபாரம் பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை தொடா் மழை பெய்தது. இதனால் தீபாவளி சாலையோர வியாபாரம் பாதிக்கப்பட்டது.

8 நவம்பர் 2026, 3:19 am
பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி அருகே சாலையில் சனிக்கிழமை தேங்கியிருந்த மழைநீா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை தொடா் மழை பெய்தது. இதனால் தீபாவளி சாலையோர வியாபாரம் பாதிக்கப்பட்டது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கேரளப் பகுதிகளில் இருந்து தெற்கு உள்கா்நாடகம் வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பாதையில் ஏற்பட்டுள்ள காற்று வேறுபாடு காரணமாக சனிக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை தொடா் மழை பெய்தது. திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் காலை முதல் மாலை வரை தொடா் மழை பெய்தது. பிற்பகலில் சுமாா் அரை மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டையில் சாலையோர வியாபாரிகள் போதிய விற்பனையின்றி தவித்தனா்.

Advertisement

Advertisement