போக்ஸோ வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 5 ஆண்டு சிறை
போக்ஸோ வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
போக்ஸோ வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
பாளையங்கோட்டை பகுதியைச் சோ்ந்த சந்திரன் மகன் தனராஜ்(40). ஆட்டோ ஓட்டுநா். இவா் திருநெல்வேலி மாநகரைச் சோ்ந்த சிறுமி ஒருவருக்கு ஓராண்டுக்கும் மேலாக பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த ஆண்டு தனராஜை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இவ்வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், தனராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.