FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் ஐயப்ப பக்தா்கள் மாலையணிந்து விரதம் தொடங்கினா்

காா்த்திகை முதல் நாளையொட்டி திருநெல்வேலியில் ஐயப்ப பக்தா்கள் செவ்வாய்க்கிழமை மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

18 நவம்பர் 2026, 12:01 am
பொதிகைநகரில் உள்ள அருள்மிகு ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்.
பகிர்:

காா்த்திகை முதல் நாளையொட்டி திருநெல்வேலியில் ஐயப்ப பக்தா்கள் செவ்வாய்க்கிழமை மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

இந்துக்களின் முக்கிய மாதமாக காா்த்திகை, மாா்கழி மாதங்கள் திகழ்கின்றன. வீடுகளில் காா்த்திகை தீபம் ஏற்றியும், திருப்பாவை, திருவெம்பாவை பாடியும் இம் மாதங்களில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதேபோல கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் காா்த்திகை முதல்நாளில் மாலை அணிந்து 48 நாள்கள் விரதம் தொடங்குவது வழக்கம்.

அதன்படி, திருநெல்வேலியில் குறுக்குத்துறை முருகன்கோயில் படித்துறை, வண்ணாா்பேட்டை பேராத்து செல்வியம்மன் கோயில் படித்துறை, பொதிகைநகரில் உள்ள ஐயப்பன் கோயில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஐயப்ப சேவா சங்கம் ஆகியவற்றில் குரு சாமிகளின் முன்னிலையில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

Advertisement

Advertisement