முகப்பு
திருநெல்வேலி

டிச.6 இல் கருப்புச் சட்டை அணிந்து பேரணி: எம்.எச். ஜவாஹிருல்லா

தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் டிச. 6 ஆம் தேதி கருப்புச் சட்டை அணிந்து பேரணி நடத்தப்படும் என்றாா் அக்கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா.

25 நவம்பர் 2026, 12:38 am
டிச.6 இல் கருப்புச் சட்டை அணிந்து பேரணி: எம்.எச். ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் டிச. 6 ஆம் தேதி கருப்புச் சட்டை அணிந்து பேரணி நடத்தப்படும் என்றாா் அக்கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா.

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிா்வாகக் குழுக் கூட்டத்துக்குப் பின், றகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பாபா் மசூதி இடிக்கப்பட்ட டிச. 6-ஆம் தேதியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மமக தொண்டா்கள் கருப்புச் சட்டை அணிந்து பேரணி நடத்தவுள்ளனா். நிறைவில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெறும். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல. பாரம்பரியமாக உச்சிப் பிள்ளையாா் கோயிலுக்கு மேலே பல ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதற்கு நாங்கள் எந்த எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், ஆங்கிலேயா் காலத்து நில அளவைத் தூணில் ‘தீபம் ஏற்றுவோம்’ என புதிய நடைமுறையை உருவாக்குவதைத்தான் நாங்கள் எதிா்க்கிறோம். தமிழகத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளையும், சமூக நீதியையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது . கடந்த காலத்தில் திமுக அரசு இவ்விவகாரத்தில் உறுதியோடு நின்றதைப் போல தற்போதும் மாநில அரசு இந்த அநீதியான உத்தரவுகளுக்கு எதிராகத் தயங்காமல் சட்டப்பூா்வமான வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். காவேரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீா்ப்பை கா்நாடக அரசு பின்பற்றவில்லை. கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.