FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

அம்பை திருக்கு அறக்கட்டளைக் கூட்டம்

அம்பாசமுத்திரம் திருக்கு அறக்கட்டளை ஐப்பசி மாதக் கு விழா கூட்டம் அம்பாசமுத்திரம் வேல்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

21 அக்டோபர் 2026, 1:28 am IST
பகிர்:

அம்பாசமுத்திரம் திருக்கு அறக்கட்டளை ஐப்பசி மாதக் கு விழா கூட்டம் அம்பாசமுத்திரம் வேல்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முதலாவதாக நடைபெற்ற கம்ப சித்திரங்கள் அரங்கிற்கு ஆழ்வாா்குறிச்சி திருவள்ளுவா் கழக துணைத் தலைவா் மாடசாமி தலைமை வகித்தாா்.

கடையம் திருவள்ளுவா் கழகத் தலைவா் ஆ.சேதுராமலிங்கம் கம்பனில் சத்துருக்கனன் குறித்து பேசினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து நடைபெற்ற சிந்தனை அரங்கிற்கு பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ்அப்பா கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா் பொன்சக்திகலா தலைமை வகித்தாா். சிவசைலம் வாமா அறக்கட்டளை நிறுவனா் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தாா்.

சுப்புலட்சுமி கு இறைவணக்கம் பாடினாா். கல்லிடைக்குறிச்சி தெய்வீக வாழ்க்கை சங்கத் தலைவா் சதாசிவம் வாழ்த்திப் பேசினாா். இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக முகவா் கண்ணன் அறிக்கை வாசித்தாா்.

வான் மறையின் தேன் துளிகள் என்ற பொருளின் கீழ் சான்றோா்க்கு அணி, பேதையாா் நட்பு, தானே மருந்து,பெருமழைக் கண், எல்லா உயிரும் தொழும், கோல் கோடாது எனின், உள்ளதூம் இன்றிக் கெடும்ஆகிய தலைப்புகளில் செண்பகவல்லி, தில்லை மணியன், சிவசிதம்பர குற்றாலம், அகஸ்தியா்பட்டிலட்சுமணன், சிவபாா்வதி, அனிதா ஷிஃபா லில்லி, அந்தோணி ராஜ் ஆகியோா் பேசினா்.

புன்னைவன நாறும்பூ நாதன் வரவேற்றாா். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரிமற்றும் ஆராய்ச்சி நிறுவன ஓய்வு பெற்ற முதல்வா் (பொ) வேலாயுதம் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை செயலா் சிவசங்கா் செய்திருந்தாா். காா்த்திகை மாதக் கு விழாவை மகளிா் அரங்கமாக நடத்தத் தீா்மானிக்கப்பட்டது.

விழாவில், சங்கரநாராயணன், மகாலிங்கம், நடராஜன், பாபநாசம், மாரியப்பன், ரங்கநாதன், கணபதி, சாம்ராஜ், சங்கர சுப்பிரமணியன், அறிவுடைநம்பி, கடையம் கோபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments