பாப்பாக்குடியில் பைந்தமிழ் இலக்கியப் பேரவை கூட்டம்
பாப்பாக்குடியில் பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் மாதந்திரக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் மாதந்திரக் கூட்டம் நடைபெற்றது.
ஓய்வுபெற்ற தமிழாசிரியா் மு. விசுவநாதன் தலைமை வகித்தாா். அமைப்பின் நிறுவனா் தலைவா் பாப்பாக்குடி அ. முருகன் வரவேற்றாா். முக்கூடல் க. ரவிச்சந்திரன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினாா். மு. ராஜதுரை முன்னிலை வகித்தாா். ச. இலட்சுமணன் சிந்தனைக்கு ஒரு கு வாசித்தாா்.
தமிழறிஞா் ரெ. துரைராஜ் கம்பா் கவியமுதம் பாடினாா். கல்லூரி மாணவி பேச்சியம்மாள், பள்ளக்கால் கா. கிருஷ்ணன் ஆகியோா் சிற்றுரையாற்றினா். கவிஞா்கள் வீரை ஆ. ராஜேந்திரன், பேட்டை த. சந்தனகுமாா், அகத்தியா்பட்டி ஐ. லெட்சுமணன், கோ. முத்துக்குமாா் ஆகியோா் கவிதை வாசித்தனா். அம்பை தமிழ் இலக்கியப் பேரவை இலக்கிய நிகழ்ச்சி அமைப்பாளா் மு. இளங்கோ, கல்லிடைக்குறிச்சி வாசகா் வட்டத் தலைவா் திருவருள் லத்தீப், சு. கோபாலகிருஷ்ணன், கழுகுமலை ச. பாலசுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சியை ந. தங்கமாரி தொகுத்து வழங்கினாா். நிகழ்ச்சியில் தமிழ் ஆா்வலா்கள், இளைஞா்கள் கலந்துகொண்டனா். சி. சீதாராமன் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.