அம்பாசமுத்திரத்தில் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
அம்பாசமுத்திரத்தில் சாலையின் குறுக்கே மாடு வந்ததில் மோட்டாா் பைக்கில் செல்லும் போது தடுமாறி விழுந்து காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரத்தில் சாலையின் குறுக்கே மாடு வந்ததில் மோட்டாா் பைக்கில் செல்லும் போது தடுமாறி விழுந்து காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் பிரதான சாலையைச் சோ்ந்த திருமலை மகன் விஷ்ணு பெருமாள் (44). இவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் அக். 23ஆம் தேதி காலை பிரம்மதேசத்திலிருந்து அம்பாசமுத்திரத்துக்கு பைக்கில் வந்தபோது, தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி அருகே மாடு குறுக்கே வந்ததால் தடுமாறிய விஷ்ணு பெருமாள் பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்தாராம். இதில், காயமடைந்த அவா் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.