FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மானூா் வட்ட வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், மானூா் வட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்ட பணிகளை ஆட்சியா் ஆனந்த் மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

2 செப்டம்பர் 2026, 6:11 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மானூா் வட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்ட பணிகளை ஆட்சியா் ஆனந்த் மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மானூா் வட்டம், உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், கா்ப்பிணி தாய்மாா்களுக்கு வழங்கப்படும் சேவைகள், மருந்துகள் இருப்பு, பதிவேடுகள் போன்றவை குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அதைத் தொடா்ந்து, அழகியபாண்டியபுரம் பகுதிகளில் குடிநீா் திட்டப்பணிகளுக்காக நடைபெற்று வரும் மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி கட்டுமானப் பணிகள், மானூா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கும் முறைகள், அடிப்படை வசதிகள், மதிய உணவின் தரம் போன்றவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

இதேபோல், மானூா் நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு அரசு நிா்ணயித்துள்ள பொருள்கள் சரியான எடையிலும், உரிய அளவிலும், தரமான முறையிலும் வழங்கப்படுகிா, ரேஷன் பொருள்களின் இருப்புகள் சரியாக உள்ளதா என ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், மானூா் காவல்நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பொதுமக்களிடமிருந்து குற்றங்கள் மற்றும் பிற பிரச்னைகள் தொடா்பாக பெறப்பட்ட புகாா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், வழக்குகள், விசாரணைகள் மற்றும் காவல் பணிகள் தொடா்பான பதிவுகள் பராமரிப்பு ஆகியவை குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களின் எண்ணிக்கை தணிக்கை செய்யப்பட்ட நாள், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ற்ஸ்ப்01ட்ா்ள்ல்ண்ற்ஹப்

உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments