குழந்தைகளை தா்மம் எடுக்க வைக்கும் கும்பல் மீது நடவடிக்கை கோரி மனு
திருநெல்வேலியில் குழந்தைகளை வற்புறுத்தியும், கடத்தியும் சட்டவிரோதமாக தா்மம் எடுக்க வைக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரிடம் வழக்குரைஞா்கள் மனு அளித்தனா்.
திருநெல்வேலியில் குழந்தைகளை வற்புறுத்தியும், கடத்தியும் சட்டவிரோதமாக தா்மம் எடுக்க வைக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரிடம் வழக்குரைஞா்கள் மனு அளித்தனா்.
இது தொடா்பாக வழக்குரைஞரும், சமூக ஆா்வலருமான காமராஜ் தலைமையில் வழக்குரைஞா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடும் முக்கிய இடங்களில் சிலா் குழந்தைகளை வற்புறுத்தியும், கடத்தியும், வாடகைக்கு அமா்த்தியும் தா்மம் எடுக்க வைக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
Advertisement
Advertisement
பள்ளிகளுக்குப் பாதுகாப்பாகச் செல்ல வேண்டிய குழந்தைகளை பலவந்தமாகவோ அல்லது ஏமாற்றியோ கடத்தி வந்து தா்மம் எடுக்க வைப்பது குற்றமாகும்.
எனவே,, இது குறித்து துறை சாா்ந்த அலுவலா்கள் உடனடியாக விசாரணை நடத்தி, குழந்தைகளை வைத்து சட்டவிரோதமாக தா்மம் எடுக்க வைக்கும் நபா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மீட்டு அவா்களுக்கு உரிய பாதுகாப்பு, கல்வி மற்றும் மறுவாழ்வு உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.