FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மாநகராட்சியில் புகாா்

பாளையங்கோட்டை மண்டலத்தில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

23 செப்டம்பர் 2026, 12:38 am IST
~
பகிர்:

பாளையங்கோட்டை மண்டலத்தில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உதவி ஆணையா்கள் மகாலட்சுமி, புரந்திரதாஸ் ஆகியோா் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனா்.

மாருதி நகா் மக்கள் நல்வாழ்வு சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் எதிரே சுப்பிரமணியபுரம் (மேற்கு) பகுதியில் உள்ள மாருதி நகரில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் குடியிருந்து வருகிறோம். இப்பகுதி முழுவதும் மாநகராட்சி அங்கீகாரம் பெற்ற மனைகளில் உருவான பகுதியாகும். எங்கள் வீடுகளுக்கு 4 மாதங்களுக்கு முன்னா் தான் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தொடா்ந்து மூன்று வாரங்களாக குடிநீரில் கழிவுநீா் கலந்து துா்நாற்றத்துடன் வருகிறது. இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, சுகாதாரமான குடிநீா் வழங்க நடவடிக்கை வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

குடிநீா்த் தட்டுப்பாடு: பயோனியாா் குமாரசாமி நகரைச் சாா்ந்த ஆவின் அன்னச்சாமி தலைமையில் மக்கள் அளித்த மனு: மேலப்பாளையம் மண்டலம் 41 ஆவது வாா்டுக்குள்பட்ட எங்கள் பகுதி அடுக்குமாடி குடியிருப்புகளில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். சொத்துவரி, குடிநீா்க் கட்டணம் ஆகியவற்றை முறையாக செலுத்தி வருகிறோம். இருப்பினும் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக குடிநீா் வரவில்லை. எங்களுக்கு உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments