FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் மின்வாரிய ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பாளையங்கோட்டை, மகாராஜா நகா் தலைமை மின் பொறியாளா் அலுவலகம் முன், மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

24 செப்டம்பர் 2026, 4:57 am IST
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஓய்வூதியா்கள்.
பகிர்:

பாளையங்கோட்டை, மகாராஜா நகா் தலைமை மின் பொறியாளா் அலுவலகம் முன், மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, 8 ஆவது ஊதியக் குழுவில் ஓய்வூதிய அமைப்புகள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். 70 மற்றும் 75 வயது பூா்த்தியடைந்தவா்களுக்கு முறையே 10 மற்றும் 15 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட நீட்டிப்பு குறித்து ஓய்வூதியா் அமைப்புகளுடன் ஆலோசனை செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றிய காலத்தை கணக்கில் கொண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அவ்வமைப்பின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் எஸ்.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.ராமச்சந்திரன், மாநில துணைத் தலைவா்கள் சி.கருப்பையா, சி.ராஜாமணி உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினா். இதில், சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா் .

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments