மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு புதிய வகுப்பறை கட்டடம்
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான புதிய வகுப்பறை கட்டடத்தை மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான புதிய வகுப்பறை கட்டடத்தை மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தனி வகுப்பறை கட்டடம் வேண்டும் என மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்காக சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக கல்வி நிதி 2015-16இல் ரூ.19.50 லட்சம் செலவில் தனி வகுப்பறை கட்டடம் கட்ட மேயர் உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement
புதிய கட்டடப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, திங்கள்கிழமை புதிய வகுப்பறை கட்டடத்தை மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் திறந்துவைத்தார். பின்னர், மாற்று திறனாளி மாணவர், மாணவிகளுக்கு சீருடை, தரை விரிப்புகள் மற்றும் இனிப்புகளை மேயர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மேற்கு மண்டல பொறுப்பு உதவி ஆணையர் ராமச்சந்திரன், மேற்கு மண்டல தலைவர் ஜெயபாரதி, மாமன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், மெஜிலா, சாந்தி, சந்திரா செல்லப்பா, அதிமுக இளைஞரணி நிர்வாகி ஏபிஆர் கவிஅரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.