FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சாத்தான்குளம், உடன்குடியில் 2 நாள்கள் குடிநீர் நிறுத்தம்

ஸ்ரீவைகுண்டம் அருகே சனிக்கிழமை குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளுக்கு 2 நாள்கள் குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

ஸ்ரீவைகுண்டம் அருகே சனிக்கிழமை குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளுக்கு 2 நாள்கள் குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் பொன்னன்குறிச்சியில் இருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் உள்ள பேரூராட்சி மற்றும் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கெட்டியம்மாள்புரம் சடையனேரி கால்வாயின் வடபுறமுள்ள குடிநீர்க் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த குழாயை சீரமைக்கும் பணியில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எனவே ஞாயிறு,திங்கள்கிழமைகளில் சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். அதுவரை கிடைக்கும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments