FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வடக்கு வண்டானம் புனித மிக்கேல் ஆலயத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டி அருகேயுள்ள வடக்கு வண்டானம் அதிதூதர் புனித மிக்கேல் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

கோவில்பட்டி அருகேயுள்ள வடக்கு வண்டானம் அதிதூதர் புனித மிக்கேல் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு காமநாயக்கன்பட்டி உதவி பங்குத்தந்தை ஜீவா ஆசீர்வதித்து கொடியேற்றினார். முன்னதாக புனித செபஸ்தியார் சப்பர பவனி நடைபெற்றது.

வண்டானம் ஆலய பங்குத்தந்தை சகாயதாசன், ஜீவா ஆகியோர் கூட்டுத் திருப்பலி, மறையுரையாற்றினர். நிகழ்ச்சியில் அச்சங்குளம், தீத்தாம்பட்டி, காமநாயக்கன்பட்டி, கோவில்பட்டி, தூத்துக்குடி, விருதுநகர், கடம்பூர், சிவகாசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திரளானோர் கலந்துகொண்டனர்.  ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை சகாயதாசன், அருள்சகோதரிகள், ஊர்பெரியோர்கள், அன்பிய குழுக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து 10 நாள்கள் இரவு 7 மணிக்கு ஜெபமாலை மன்றாட்டு திருப்பலி, மறையுரை நடைபெறும். அக்டோபர் 2ஆம் தேதி நவநாளான முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, புனித சவேரியார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

அக்டோபர் 4ஆம் தேதி காலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித மிக்கேல் அதிதூதரின் திருவுருவம் முக்கிய வீதிகளில் பவனியாக எடுத்து வரப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments