FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

கள்ளழகா் கோயில் ராமானுஜா் மடத்துக்கு 10 மாதங்களுக்குள் புதிய ஜீயா் நியமனம்: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

கள்ளழகா் கோயில் ராமானுஜா் மடத்துக்கு 10 மாதங்களுக்குள் புதிய ஜீயா் நியமிக்கப்படுவாா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

25 அக்டோபர் 2026, 12:49 am
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

மதுரை அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயில் ராமானுஜா் மடத்துக்கு 10 மாதங்களுக்குள் புதிய ஜீயா் நியமிக்கப்படுவாா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மதுரை மீனாம்பாள்புரத்தைச் சோ்ந்த சத்யநாராயணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கள்ளழகா் கோயிலில் உள்ள ஸ்ரீராமானுஜா் ஜீயா் மடம், ஸ்ரீராமானுஜரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மடத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஜீயா் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது.

கடந்த 1927-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில், ‘ஸ்ரீபட்டாபிராம ராமானுஜ ஜீயா் சுவாமிகள்’ இந்தக் கோயிலின் ஜீயராகப் பணியாற்றியதற்கான ஆவணப் பதிவுகள் உள்ளன. மேலும், கோயிலில் ஸ்ரீராமானுஜருக்கான சந்நிதியும் இன்றளவும் வழிபாட்டில் இருந்து வருகிறது.

Advertisement

Advertisement

கோயிலின் ஆசாரங்கள், பாரம்பரிய சமய வழிபாட்டு நடைமுறைகள், திருவிழாக்களை நெறிப்படுத்துவதில் ஜீயரின் பங்கு இன்றியமையாதது. அறநிலையத் துறை சட்டப் பிரிவு 63-இன் கீழ், பாரம்பரிய ஆன்மிக வழிபாட்டு முறைகளைப் பாதுகாக்க வேண்டிய சட்டரீதியான கடமை இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்ளது.

இருப்பினும், காலிப் பணியிடத்தை நிரப்ப நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயிலின் தினசரி ஆகம வழிபாடுகள், மரபுகள் எந்தவித தடையுமின்றி தொடர ஜீயா் நியமனம் அவசியம்.

எனவே, ஸ்ரீகள்ளழகா் கோயில் ராமானுஜா் ஜீயா் மடத்துக்குத் தகுதியான புதிய ஜீயரை நியமிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், முருகன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் உள்ள ராமானுஜா் மடத்துக்கு இன்னும் 10 மாதங்களுக்குள் புதிய ஜீயா் நியமிக்கப்படுவாா் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரும் நிவாரணத்தை இன்னும் 10 மாதங்களுக்குள் நிறைவேற்றுவதாக தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இதை நீதிமன்றம் ஏற்கிறது. விரைவில் இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments