FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மினி மாரத்தான்: திருச்செந்தூர் கல்லூரி மாணவி முதலிடம்

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி மாணவி அபிஷா முதலிடம் பெற்றார்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி மாணவி அபிஷா முதலிடம் பெற்றார்.

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

போட்டியை வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வாளர் கனகவள்ளி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

Advertisement

Advertisement

 ஓட்டம் கல்லூரி முன் தொடங்கி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வரை சென்று மீண்டும் காயல்பட்டினத்தில் நிறைவு பெற்றது. போட்டித் தொலைவை 38 நிமிடங்களில் கடந்து கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி மாணவி அபிஷா பெல்சியா முதல் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பையை வென்றார். வாவு வஜீஹா கல்லூரி மாணவி செல்வமணி 2ஆவது பரிசாக ரூ.3 ஆயிரமும், கோவிந்தம்மாள் மகளிர் கல்லூரி மாணவி ஏ.சுபாஷினி 3 ஆவது பரிசாக ரூ.2 ஆயிரமும் பெற்றனர். 4 முதல் 20ஆவது இடம் வரை பெற்ற அனைவருக்கும் தலா ரூ.500 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரித் தலைவர் வாவு எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார். செயலர் எம்.எம்.மொகுதஸிம், நிர்வாகக் குழு உறுப்பினர் அபுல் ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 முதல்வர் ரா.அருணாஜோதி வாழ்த்திப் பேசினார். திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் எம்.ராஜகுமாரி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

அரபித் துறை தலைவர் முத்து மொகுதூம் பாத்திமா வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் ஆர்.அனிஷ்டா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments