FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராணுவ அஞ்சல் தலை கண்காட்சி

தூத்துக்குடியில் ராணுவ அஞ்சல் துறையின் 45 ஆவது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற அஞ்சல் தலை கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தூத்துக்குடியில் ராணுவ அஞ்சல் துறையின் 45 ஆவது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற அஞ்சல் தலை கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ராணுவ அஞ்சல் துறையின் 45ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டது. விழாவின்போது ராணுவ அஞ்சல் துறையின் சேவையைப் பாராட்டும் வகையில் கேக் வெட்டப்பட்டது.

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் தலைகள், சிறப்பு அஞ்சல் உறைகள் ஆகியவை அடங்கிய கண்காட்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement

கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பனிமய மாதா ஆலயம், கடலோர காவல் படையின் அகல்யாபாய் ரோந்து கப்பல், வஉசி, பிஷப் கால்டுவெல் ஆகியோரின் சிறப்பு அஞ்சல் உறைகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.

நிகழ்ச்சிக்கு, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் மா. சுந்தரம் தலைமை வகித்தார். லெப்டினன்ட் கர்னல் ஜார்ஜ் மாத்யூ, கமாண்டர் ரவிராமன், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராஜீவ், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  கண்காட்சியை அஞ்சல் துறை அதிகாரிகளும், பொதுமக்களும் பார்வையிட்டனர்.

கண்காட்சி குறித்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த லெப்டினன்ட் கர்னல் மா. சுந்தரம் கூறியது: முதல் ராணுவ அஞ்சல் நிலையம் 1856 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதியில் இருந்து 1857 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி வரை புஷரில் இயங்கியது. மறைந்த பிரிகேடியர் டி.எஸ். விர்க் ஏ.வி.எஸ்.எம். மூலம் 1972 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் ராணுவ அஞ்சல் துறை தனி ராணுவ அங்கமாக இயங்கி வருகிறதுஎன்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments