திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூரில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பில் திருச்செந்தூர் தேரடி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, விசுவ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் மகர நெடுங்குழைக்காதர் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத் துறை தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து வெளியேற வேண்டியும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட த் தலைவர் கணேஷ்குமார், துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன், செயல் தலைவர் விவேகம், பஜ்ரங்கள் தள் மாவட்ட அமைப்பாளர் தேவராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.