FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காமநாயக்கன்பட்டி பரலோக மாதா ஆலயத்தில் தேர் பவனி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்புப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி புதன்கிழமை நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்புப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி புதன்கிழமை நடைபெற்றது. 
இந்த ஆலயத்தில் விண்ணேற்புப் பெருவிழா ஆண்டுதோறும் 10  நாள்கள் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழா கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
6ஆம் திருநாளான சனிக்கிழமை மரியன்னை மாநாடு,  7ஆம் நாளில் புதுநன்மை விழா, 9ஆம் நாளான செவ்வாய்க்கிழமை ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி, மாலை ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
10ஆம் திருநாளான புதன்கிழமை அதிகாலை 2.30  மணிக்கு பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில், அருள்தந்தையர் திருவிழா திருப்பலி நடத்தினர். அதையடுத்து தேர் பவனி நடைபெற்றது.  அலங்கரிக்கப்பட்ட இரு ரதங்களில் பரலோக மாதாவும், ஆரோக்கிய மாதாவும் தனித்தனியே புறப்பட்டு ரத வீதிகளில் பவனி வந்தனர். இறைமக்கள் ரதங்களின் பின்புறத்தில் கும்பிடுசேவை செய்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். 
இதையடுத்து, தென்காசி வட்டார அதிபர் பங்குத்தந்தை சின்னப்பன், ஆயர் இல்லம் ராபின், கோவில்பட்டி ஆலயப் பங்குத்தந்தை அலாய்சியஸ் துரைராஜ், கீழமுடிமண் பங்குத்தந்தை உபட்டஸ், அருள்தந்தையர் பிரான்சிஸ் வியாகப்பன், சகாயதாசன், எம்.எஸ். அந்தோணிசாமி, வியாகப்பராஜ், யூதா போஸ்கோ, பெஞ்சமின், கென்னடி, அந்தோணிராஜ், ஞானப்பிரகாசம், சூசைசெல்வராஜ், கில்பர்ட், ஜோசப், எட்வின்ராஜ் ஆகியோரும், பகலில் புனித சவேரியார் பேராலயப் பங்குத்தந்தை ராஜேஷ், திருச்சி புனித பவுல் குருமடம் பேராசிரியர் ஜீவராஜ் ஆகியோரும் திருவிழா திருப்பலியை நடத்தினர்.  பிற்பகலில் பாட்டாக்குறிச்சி ஓ.எஸ்.ஏ. குருமடம் அருள்திரு ரினாய் மலையாளத்திலும், வாராணசி அருள்திரு பிரான்சிங் வியாகப்பன் ஹிந்தியிலும் திருப்பலி நடத்தினர். 
மாலையில் புனித சவேரியார் கல்லூரி அதிபர் ஹென்றி தாமஸ், பாளை., புனித சவேரியார் கலைமனைகள் சேசுசபை அருள்தந்தையர் திருப்பலி, நற்கருணை பவனியை நடத்தினர். 
விழாவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான இறைமக்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி மாவட்ட எஸ்.பி.  முரளிரம்பா உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு பகுதகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மருத்துவக் குழு சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சார்பில் ஆய்வுப் பணியும் நடைபெற்றது. 
ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி ஆலயப் பங்குத்தந்தை எஸ்.எம். அருள்ராஜ் தலைமையில், உதவிப் பங்குத்தந்தை கே. சுந்தர், மரியின் ஊழியர் சபை அருள்சகோதரிகள், காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி பகுதி இறைமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments