FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

மாவட்ட கபடி: முத்தையாபுரம் அணி சிறப்பிடம்

தமிழக  முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தாநாளையொட்டி, உடன்குடி கொட்டங்காடு காமராஜர் நற்பணி மன்றம்  சார்பில் மாவட்ட அளவில்

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 7:40 am IST
பகிர்:

தமிழக  முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தாநாளையொட்டி, உடன்குடி கொட்டங்காடு காமராஜர் நற்பணி மன்றம்  சார்பில் மாவட்ட அளவில்  நடைபெற்ற மின்னொளி கபடிப் போட்டியில்  தூத்துக்குடி முத்தை யாபுரம் அணி  வெற்றி பெற்றது.
நிகழ்ச்சிக்கு சரஸ்வதி பங்காளன் தலைமை வகித்தார். நற்பணி மன்ற நிர்வாகிகள் வாடாப்பு ராஜா, செந்தூர்பாண்  டி, செந்தில், தனீஷ், ஜீவானந்தம், சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூன்று மாவட்டங்களில் இருந்து 11 அணிகள் போட்டியில் பங்கேற்றன.
இதில், தூத்துக்குடி முத்தையாபுரம் அணி முதலிடமும், பாளையங்கோட்டை சிறைத்துறை இரண் டாமிடமும், கன்னியாகுமரி மாவட்டம் மூலைச்சல் அணி மற்றும் மெஞ்ஞானபுரம் ஜான்தாமஸ் அணிகள் மூன்றாமிடமும் பெற்றன. முதலிடம் பெற்ற முத்தையாபுரம் அணிக்கு திருச்செந்தூர் சட்டப்பேரவை  உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ரூ. 25,000 பரிசு வழங்கிப் பாராட்டினார். இரண்டாம் இ டம்  பெற்ற அணிக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக சிறுபான்மை நலப்பிரிவு செயலர் ராஜேஷ் ரூ. 15,000-மும்,  மூன்றாமிடம் பெற்ற அணிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக பொருளாளர்  வி.பி. ராமநாதன், தொழிலதிபர் கண்ணன் ஆகியோர் தலா ரூ. 10,000 பரிசு  வழங்கினர். 
வெற்றிக் கோப்பையை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் மா. ரவிராஜா வழங்கினார். இதில், உடன்குடி ஒன்றிய திமுக செயலர் பாலசிங், நகரச் செயலர்  ஜான்பாஸ்கர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சக்திவேல், தொழிலதிபர் அப்துல்ஹமீது, பரமன்குறிச்சி  ஊராட்சி திமுக செயலர் க. இளங்கோ, வர்த்தக அணி ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments