FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: காயமடைந்த 14 பேரிடம் விசாரணை நிறைவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோரில் 14 பேரிடம் விசாரணை புதன்கிழமை நிறைவடைந்தது.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோரில் 14 பேரிடம் விசாரணை புதன்கிழமை நிறைவடைந்தது.
தூத்துக்குடியில் கடந்த மே 22, 23ஆம் தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடங்கள், இறந்தோரின் குடும்பத்தினர் என,  இரு கட்டங்களாக நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில், தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள ஆணையத்தின் முகாம் அலுவலகத்தில் 3ஆம் கட்ட விசாரணையை நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த 27ஆம் தேதி தொடங்கினார். முதல்நாள் 5 பேரிடம், 2ஆம் நாள் 5 பேரிடம், 3ஆம் நாளான புதன்கிழமை 4 பேரிடம் என 14 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மொத்தம் 21 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட நிலையில், 14 பேர் மட்டுமே ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 4ஆம் கட்டமாக அடுத்த மாதம் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments