சாத்தான்குளம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, தருவைகுளம் பங்குத்தந்தை எட்வர்ட் தலைமை வகித்தார். சாத்தான்குளம் வட்டார முதன்மை பங்குத்தந்தை ரெமிஜியுஸ், உதவி பங்குத்தந்தை ரூபன், சிதம்பராபுரம் பங்குத்தந்தை பபிஸ்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தாளாளர் மற்றும் முதல்வர் செல்வராயர் வரவேற்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர், மாணவிகள் கிறிஸ்து பிறப்பை நடித்து காட்டினர். மாணவி நர்மதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாணவி அபிநயா நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.