அன்னதான இலைகளில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம்
கோவில்பட்டியில் லோக்வீர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 44 ஆவது ஆண்டு விழா
கோவில்பட்டியில் லோக்வீர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 44 ஆவது ஆண்டு விழா மண்டல பூஜை, அன்னதான விழாவில் பக்தர்கள் இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.
அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் வளாகத்தில் ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியன நடைபெற்றன. 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை, கோயில் வெளிப்புற மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானம் முடிந்ததும் இலைகளை எடுக்காமல் அதில் ஐயப்பப் பக்தர்கள், குழந்தைகள், பெண்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.