எட்டயபுரத்தில் பாஜக தெருமுனை பிரசார கூட்டம்
எட்டயபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
எட்டயபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
பாஜக ஒன்றியத் தலைவர் ராம்கி தலைமை வகித்தார். நகரத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் செய்துள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் உரையாற்றினர்.
பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி, மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி, ஒன்றிய பொதுச்செயலர்கள் குருராஜ், மாரிமுத்து, நகர, ஒன்றிய நிர்வாகிகள் வேல்ராஜா, தினேஷ், முத்துவேல், ஆர்த்தி ராஜ், ஜீவானந்தம், சக்திகுமார், கந்தசாமி, லட்சுமணன், மைதீன்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.