கயத்தாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
கயத்தாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கயத்தாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கயத்தாறையடுத்த தெற்கு சுப்பிரமணியபுரம் வடக்கு மயிலோடைத் தெருவைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டி மனைவி வேல்தாய் (27). இவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். இந்நிலையில் புதன்கிழமை மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.