FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோவில்பட்டியில் பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக கண்டனம் தெரிவித்தும்,

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக கண்டனம் தெரிவித்தும், பாஜகவை விமர்ச்சித்த மாணவி சோபியாவை கைது செய்ய வலியுறுத்தியும், அக்கட்சியினர் கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
பயணியர் விடுதி முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பாஜக மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் வேல்ராஜ், ஒன்றியத் தலைவர் ராம்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் எம்.பாலாஜி, வடக்கு மாவட்ட துணைத் தலைவர் பால்ராஜ், வழக்குரைஞர் சந்தனகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில்,  நகரப் பொதுசெயலர்கள் தினேஷ்குமார், முனியராஜ், ஒன்றியப் பொதுசெயலர் மாரிமுத்து, ஒன்றியச் செயலர் ஜீவா, பிரசார அணி மாவட்ட துணைத் தலைவர் லட்சுமணக்குமார், சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளர் பாலு, மாவட்ட பொதுச்செயலர் ஆர்.டி.பாலாஜி, மாவட்ட இளைஞரணித் தலைவர் மாரிசெல்வம் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments