திருச்செந்தூரில் வ.உ.சி. பிறந்த நாள்
வ.உ.சிதம்பரனாரின் 147ஆவது பிறந்த நாள் விழா திருச்செந்தூரில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சன்னதி தெருவில் உள்ள அவரது
வ.உ.சிதம்பரனாரின் 147ஆவது பிறந்த நாள் விழா திருச்செந்தூரில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சன்னதி தெருவில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பாஜக சார்பில், மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் கிருஷ்ணன், திருச்செந்தூர் ஒன்றிய தேமுதிக சார்பில் ஒன்றியச் செயலர் எஸ்.ஏ.செந்தில்குமார், காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்குரைஞர் சந்திரசேகரன் ஆகியோர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சைவ வேளாளர் ஐக்கிய சங்கம்: மாவட்ட சைவ வேளாளர் சங்கம் சார்பில், திருச்செந்தூர் சைவ வேளாளர் சங்கத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாவட்டச் செயலர் ஏ.பி.கே.பாலன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் வட்டார சைவ வேளாளர் சங்கம் சார்பில் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில் முன் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆசிரியர் முருகன், கிட்டுப்பிள்ளை, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வ.உ.சி. உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி சைவ சித்தாந்த கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வ.உ.சி. உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆத்தூர் கீழ ரதவீதியில் உள்ள சைவ வேளாளர் அபிவிருத்தி சங்க வளாகத்தில், வ.உ.சி. யின் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.