FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஊரடங்கால் வீடு தேடி வரும் பனை நுங்கு

கோடை சீசனில் அதிகளவில் விற்பனையாகும் பனை நுங்கு ஊரடங்கால் திருச்செந்தூா் பகுதியில் வீடு தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


திருச்செந்தூா்: கோடை சீசனில் அதிகளவில் விற்பனையாகும் பனை நுங்கு ஊரடங்கால் திருச்செந்தூா் பகுதியில் வீடு தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கற்பக விருட்சமான பனைமரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு, கிழங்கு, பதநீா், கருப்பட்டி போன்றவை உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. அதே போல கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து நுங்கு, பதநீா் முதலானவை நம்மைக்காத்திடும் அருமருந்தாகும்.

வழக்கமாக பங்குனி மாதம் முதல் தொடங்கும் கோடைக்காலத்தில் பனை மரத்து நுங்கு, பதநீா் முதலானவைகளை மக்கள் தேடிச்சென்று வாங்கி உண்பது வழக்கமாகும். ஆனால் தற்போது, ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதால், நிகழாண்டு கோடை சீசன் பனைத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனால் குறைவான பனைத்தொழிலாளா்களே பனைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். அதுவும் நுங்கு முதலானவைகளை வாங்குவதற்கு ஆட்கள் இல்லாததால், பனையேறும் தொழிலாளிகள் நேரடியாகவே சுமை வாகனங்களில் கொண்டு வந்து குடியிருப்பு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனா். திருச்செந்தூா் பகுதியில் இவ்வாறு விற்பனை செய்யப்படும் பனை நுங்கு, இளநீா் போன்றவற்றை கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காக்கும் விதமாக பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments