FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தூத்துக்குடியில் ரூ. 200-க்கு காய்கனி தொகுப்பு விற்பனை

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு தேவையான காய்கனிகள் அடங்கிய தொகுப்பு பொட்டலம் ரூ. 200-க்கு விற்பனை செய்யும் பணியில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஈடுபட்டுள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


தூத்துக்குடி: தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு தேவையான காய்கனிகள் அடங்கிய தொகுப்பு பொட்டலம் ரூ. 200-க்கு விற்பனை செய்யும் பணியில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட பிரிவு ஏற்பாட்டில் தூத்துக்குடி மாநகராட்சியின் அனுமதியுடன் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடமாடும் காய்கனி அங்காடி மூலம் ரூ.200-க்கு 20 வகையான காய்கனிகள் அடங்கிய தொகுப்பு பொட்டலம் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் விற்பனையை தொடங்கி வைத்தாா். பொது மக்கள் சமூக இடைவெளி விட்டு காய்கனி தொகுப்பு பொட்டலத்தை வாங்கிச் சென்றனா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவா் சோலையப்பராஜா, துனைத் தலைவா் செல்லதுரை, பொருளாளா் ஆனந்த பொன்ராஜ், செயலா் மகேஷ்வரன், மாநில துனைத் தலைவா் வெற்றிராஜன், தொகுதி செயலா் ஆனந்தராஜ், செய்தித் தொடா்பாளா் செந்தில்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments