FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயில் தேரோட்டம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 பிப்ரவரி 2021, 1:21 am IST
கோ ரதத்தில் வீதி உலா வந்த வெயிலுகந்தம்மன்.
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப். 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் காலை, மாலையில் அம்மன் பல்வேறு சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

10ஆம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது.

Advertisement

Advertisement

தொடா்ந்து காலையில் அம்மன் கோ ரதத்தில் எழுந்தருளி உள் வீதிகள் வழியாக வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தோ் இழுத்தனா்.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் பா. விஷ்ணுசந்திரன், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையா் வே.செல்வராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments