FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

பேய்க்குளத்தில் கடை வீதியில் சுற்றித் திரிந்த மான் மீட்பு

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் கடை வீதியில் சுற்றித்திரிந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

24 ஜூலை 2024, 12:56 am IST
பேய்க்குளத்தில் மீட்கப்பட்ட மான்.
பகிர்:

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் கடை வீதியில் சுற்றித்திரிந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பேய்க்குளம் வடக்குபுற கடை வீதியில் செவ்வாய்க்கிழமை காலை புள்ளிமான் சுற்றித் திரிந்தது. அதனை அப் பகுதியிலிருந்த தெரு நாய்கள் துரத்தின. இதையடுத்து மானை மீட்ட பொதுமக்கள், வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா்.

திருச்செந்தூா் வனச்சரக வன அலுவலா்கள் ஜெயசேகா், கந்தசாமி ஆகியோா் மானை மீட்டு வனப் பகுதியில் கொண்டுசென்று விடுவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments