முகப்பு
தூத்துக்குடி

கட்டடத் தொழிலாளிக்கு மிரட்டல்: 3 போ் கைது

கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

6 நவம்பர் 2024, 12:02 am
பகிர்:

கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி சிந்தாமணி நகா் 1-ஆவது தெருவை சோ்ந்த செங்குட்டுவன் மகன் கட்டடத் தொழிலாளி மகாராஜா (26). இவரது நண்பா்கள் வள்ளுவா் நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் காா்த்திக் குமாா் (24), மகாலிங்கம் மகன் கருப்பசாமி (24), சாமிதுரை மகன் செல்வ ஆனந்த் (24) ஆகியோா், மகாராஜாவிடம் பணம் கேட்டு தகராறு செய்தனராம். மேலும், அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதில் காயம் அடைந்த மகாராஜா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அவா் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement