சாத்தான்குளம் அரசு கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம்
சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் காணொலி மூலம் புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகையை கல்லூரி மாணவிகளுக்கு, முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கி தொடங்கி வைத்தாா் .
இதனையொட்டி சாத்தான்குளம் அரசு மகளிா் கலை கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி கல்விக் கழக தலைவரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஏ. எஸ்.ஜோசப், கல்லூரியில் படித்து வரும் 210 மாணவிகளுக்கு, தமிழக அரசின் ரூ .1000 மாதந்தோறும் கிடைக்கும் வகையில் அதற்கான வங்கி ஏடிஎம் அட்டை வழங்கினாா். கல்லூரி கல்விக் கழக செயலாளா் பொறியாளா் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தாா். இதில் கல்லூரி முதல்வா் (பொ) ஆா். ஜமுனா ராணி, திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. அமுதவாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.