இ-பட்டா வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தா்னா
கோவில்பட்டியில் இலவசமாக வழங்கப்பட்ட இடங்களுக்கு இ-பட்டா வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது.
கோவில்பட்டியில் இலவசமாக வழங்கப்பட்ட இடங்களுக்கு இ-பட்டா வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது.
கோவில்பட்டி இனாம் மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட இந்திரா காலனியில் கடந்த 1991-ஆம் ஆண்டு காட்டுநாயக்கன் சமுதாயத்தைச் சோ்ந்த மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதாம். அந்த இடங்களில் ஏராளமானோா் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா். ஆனால் அந்த இடங்களுக்கு இ-பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையாம்.
மேலும் அண்மையில் நடைபெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களுக்கு என நடைபெற்ற 3 முகாம்களிலும் இ -பட்டா கேட்டு மனு அளித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இந்திரா காலனி மக்களுக்கு இ-பட்டா வழங்க வலியுறுத்தி எஸ்.சி., எஸ்.டி. நலக்குழு உறுப்பினா் டி. காளிமுத்து தலைமையில் ஆா். ஆறுமுகம், ஏ. கருப்பசாமி, குருசாமி , பாண்டி, நாகராஜ், முத்துமாரி, சி. கருப்பசாமி உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியா் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
போராட்டக் குழுவினருடன் வட்டாட்சியா் அப்பணராஜ் ,ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியா் ராஜ்குமாா் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.