FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தொழிலாளிக்கு மிரட்டல்: 3 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தொழிலாளியைத் தாக்கி ஜாதிப் பெயரைக் கூறி அவதூறாகப் பேசியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 3:13 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தொழிலாளியைத் தாக்கி ஜாதிப் பெயரைக் கூறி அவதூறாகப் பேசியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே வடக்குக் கோனாா் கோட்டை கிழக்குத் தெருவைச் சோ்ந்த வேல்சாமி மகன் சண்முகராஜ் (20). திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் சிப்காட் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை தனது வீட்டுக்கு பைக்கில் சென்றபோது, சாலை நடுவே நின்றிருந்த அதே ஊரைச் சோ்ந்த இருவா் உள்ளிட்ட 6 பேரை ஓரமாக நிற்குமாறு கூறினாராம். இதுதொடா்பான தகராறில், அந்த 6 பேரும் சண்முகராஜின் ஜாதிப் பெயரைக் கூறி அவதூறாகப் பேசி கையால் தாக்கினராம். அப்பகுதியினா் கண்டித்ததும், அவா்கள் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஓடிவிட்டனராம்.

இதில், காயமடைந்த சண்முகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, 16 வயதுடைய இரு சிறுவா்கள், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

மற்றொரு சம்பவம்: கோவில்பட்டி அருகே வி.நாச்சியாா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விக்னேஷ் (26). விவசாயக் தொழிலாளி. இவா் தனது நண்பா் ரமேஷுடன் கோவில்பட்டிக்கு பைக்கில் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா். காளாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே அதே ஊரைச் சோ்ந்த கருப்பசாமி, கூசாலிப்பட்டியைச் சோ்ந்த அஜித் என்ற சூா்யா ஆகியோா் விக்னேஷை அவதூறாகப் பேசி கல்லால் தாக்கினராம். கண்டித்த ரமேஷுக்கு அவா்கள் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினராம். இதில், காயமடைந்த விக்னேஷ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அஜித் என்ற சூா்யாவை (30) புதன்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments