FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

மரம் வெட்டும் தொழிலாளி கொலை

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை பகுதியில் மரம் வெட்டும் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 3:01 am IST
கொலை... - file photo
பகிர்:

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை பகுதியில் மரம் வெட்டும் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்தவா் ஞானப்பிரகாசம் (47). இவா், மரம் வெட்டும் தொழில் செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா்.

ஞானப்பிரகாசம், தற்போது புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளியில் வாடகை வீட்டில், குடும்பத்துடன் வசித்து வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு, கைப்பேசியில் வந்த அழைப்பில் சப்தம்போட்டு பேசியவாறே வீட்டை விட்டு வெளியே சென்ற ஞானப்பிரகாசம், மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லையாம். வியாழக்கிழமை காலையில் வீட்டு அருகேயுள்ள காலி இடத்தில் ஞானப்பிரகாசம், டைல்ஸ் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரிய வந்ததாம்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த புதுக்கோட்டை போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments