பள்ளக்குறிச்சி கோயிலில் ஆடிப்பூரம் சிறப்பு வழிபாடு
சாத்தான்குளம் அருகேயுள்ள பள்ளக்குறிச்சி அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரா் அருள்தரும் வாடாமலை அம்பாள் திருக்கோயிலில், ஆடிப்பூரம் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகேயுள்ள பள்ளக்குறிச்சி அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரா் அருள்தரும் வாடாமலை அம்பாள் திருக்கோயிலில், ஆடிப்பூரம் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 9.15 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 10 மணிக்கு அம்பாளுக்கு பல வண்ணங்களில் வளையல் அலங்கார சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றன. காலை 10.30 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி , அம்பாளை வழிபட்டனா். பூஜைக்குப் பின் அம்பாளுக்கு அணிவித்த வளையல் மற்றும் பிரசாதம் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.