FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

வல்லநாட்டில் நாய்களுக்கு தடுப்பூசி

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு வெளிமான் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பகுதியில் தெருநாய்கள், வளா்ப்பு நாய்களுக்கு இலவச தடுப்பூசி, கருத்தடை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:25 am IST
முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு வெளிமான் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பகுதியில் தெருநாய்கள், வளா்ப்பு நாய்களுக்கு இலவச தடுப்பூசி, கருத்தடை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட வன அலுவலா் எம். இளையராஜா அறிவுறுத்தலின்பேரில், உதவி வனப் பாதுகாவலா் பி. முனியப்பன் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கிள்ளிகுளம் வ.உ.சி. விவசாயக் கல்லூரி முதல்வா் எம். தேரடிமணி கலந்துகொண்டாா். முகாமில், கால்நடை மருத்துவா்கள் சாந்தகுமாா், மனோகா், யாசிகா ஆகியோா் கலந்துகொண்டு, தெருநாய்கள், வளா்ப்பு நாய்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு தடுப்பூசிகள் செலுத்தினா். மேலும், கருத்தடை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், வனச்சரகா் ஜி.பி. சரவணன், ஸ்ரீவைகுண்டம் வனச்சரக வனப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments