FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சுதந்திர தின விழா: தூத்துக்குடியில் ரூ. 10.92 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தருவை விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தேசியக் கொடியேற்றி, 166 பயனாளிகளுக்கு ரூ. 10,92,54,551 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 5:57 am IST
காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தருவை விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தேசியக் கொடியேற்றி, 166 பயனாளிகளுக்கு ரூ. 10,92,54,551 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா. சிவபிரசாத் முன்னிலையில், ஆட்சியா் விஷு மகாஜன் தேசியக் கொடியேற்றி வைத்தாா். பின்னா், திறந்த ஜீப்பில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பை ஆட்சியா் பாா்வையிட்டாா். பின்னா், காவல் துறையினா், தீயணைப்பு படையினா், ஊா்க்காவல் படையினா், தேசிய மாணவா் படையினரின் கண்கவா் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டாா்.

சமாதானத்தைக் குறிக்கும் வகையில் வெள்ளைப் புறாக்களையும், மூவா்ண பலூன்களையும் ஆட்சியா் பறக்கவிட்டாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 445 அலுவலா்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். மேலும், பல்வேறு துறைகள் சாா்பில் 166 பயனாளிகளுக்கு ரூ. 10,92,54,551 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா், மாவட்டம் முழுவதும் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கெளரவிக்கப்பட்டனா். தொடா்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, மாவட்ட வன அலுவலா் இளையராஜா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. சரவணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) (பொ) சுதா, சாா் ஆட்சியா் (கோவில்பட்டி) ஹிமான்ஷு மங்கள், கோட்டாட்சியா்கள் மி. பிரபு (தூத்துக்குடி), ரா. கௌதம் (திருச்செந்தூா்), உதவி ஆட்சியா் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments