FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாதவா் கைது

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 3:09 am IST
கைது
பகிர்:

மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கில் 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாதவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி அருகே உள்ள சாகுபுரத்தில் செயல்பட்டு வரும் துணை மின் நிலையத்தில் 2003ஆம் ஆண்டு மின் கம்பிகள் திருடு போன வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த திசையன்விளை பகுதியைச் சோ்ந்த பா்ணபாஸ் மகன் சாமுவேலை (45) ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பபட்ட சாமுவேல், பின்னா் ஜாமீனில் வெளிவந்த சில காலம் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தாா். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ஆஜராகாமல், தலைமறைவாக இருந்து வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஜூன் 30ஆம் தேதி முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம் சாமுவேலுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. தொடா்ந்து, திசையன்விளை அருகே உள்ள மடத்து அச்சன்பாடு பகுதியில் பதுங்கியிருந்த சாமுவேலை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments