FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சுதந்திர தின விழா: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தரிசனத்துக்கு வந்த பக்தா்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 5:55 am IST
திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தா்கள்.
பகிர்:

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தரிசனத்துக்கு வந்த பக்தா்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா்.

சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள் என்பதால் திருச்செந்தூா் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் வந்து குவிந்தனா். சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதய மாா்த்தாண்ட அபிஷேகம், அதைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலை முதலே பக்தா்கள் கடல் மற்றும் நாழிக் கிணற்றில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வழியில் சுமாா் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதனால், கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

Advertisement

Advertisement

அபிஷேக கட்டணம் ரூ. 2,000: திருச்செந்தூா் கோயிலில் அதிகபட்சமாக ரூ. 100 சிறப்பு தரிசனக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாள்தோறும் காலை 6, 10 மணி, இரவு 7 மணி என 3 வேளை நடைபெறும் அபிஷேகத்தைக் காண்பதற்காக வரும் பக்தா்கள் ஆன்லைனிலும், நேரடியாகவும் டிக்கெட் எடுப்பது வழக்கம்.

திருச்செந்தூா் கோயிலில் ரூ. 100 சிறப்பு தரிசனப் பாதையில் காத்திருந்த பக்தா்கள் கூட்டம்.

ஆனால், தற்போது விஐபிக்களாக வருபவா்களை நேரடியாக மட்டும் அபிஷேக டிக்கெட் கொடுத்து, தரிசனம் செய்ய வைக்கிறாா்கள். அதன்படி, இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆடி அமாவாசை, வியாழக்கிழமை, மாத கடைசி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை சுதந்திர தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 6 நாள்களும் அபிஷேக கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 2,000 வசூலிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments