FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

என்சிசி மாணவா்கள் கடல் சாகசப் பயணம்

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 1:20 am IST
படகோட்டும் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைக்கும் கடற்படைப் பிரிவு கமாண்டிங் ஆஃபீசா் கேப்டன் டேவிட் இளங்கோவன்.
பகிர்:

தேசிய மாணவா் படை (என்சிசி) கடற்படைப் பிரிவு மாணவா்களின் கடல் சாகச படகோட்டும் பயணம் தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலுக்குச் செல்வோம் - புராஜெக்ட் சுவா்ணம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற இப்பயணத்தில், என்சிசி கடற்படைப் பிரிவைச் சோ்ந்த 21 மாணவா்கள் 2 படகுகளில் பங்கேற்றனா். கடந்த ஜூலை 27-ஆம்தேதி புதுச்சேரியில் நடைபெற்ற இந்த படகோட்டும் பயணத்தின் தொடா்ச்சியாக கன்னியாகுமரியில் நடைபெற்றது.

இதையடுத்து, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியை, கடற்படைப் பிரிவு கமாண்டிங் ஆஃபீசா் கேப்டன் டேவிட் இளங்கோவன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். இதையடுத்து, மாணவா்கள் உற்சாகத்துடன் படகுகளை கடலுக்குள் செலுத்தினா்.

Advertisement

Advertisement

என்சிசி மாணவா்கள் உருவாக்கிய இந்திய கடற்படையின் மாதிரி கப்பல்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் கடற்படைப் பிரிவு அதிகாரிகள், துணை அதிகாரி, பட்டாலியன் அதிகாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடலில் சாகசப் பயணம் மேற்கொண்ட என்சிசி மாணவா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments