FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

முதல்வா் விருது பெற்ற இளைஞா் ஆட்சியரிடம் வாழ்த்து

முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற்ற சரவணக்குமாா், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜனை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 1:20 am IST
மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜனை சந்தித்து, வாழ்த்து பெற்ற முதல்வா் விருது பெற்ற சரவணக்குமாா்.
பகிர்:

முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற்ற சரவணக்குமாா், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜனை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாளமுத்து நகரைச் சோ்ந்தவா் சரவணக்குமாா். இவா், பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய மாணவா்களை சந்தித்தல், பின்தங்கியோருக்காக குரல் கொடுக்கும் நிகழ்ச்சிகள், ஒற்றுமைப் பேரணி, மரம் நடுதல், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு உள்ளிட்ட சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளாா்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், இவரது சமூகப் பணிகளை பாராட்டி தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய், மாநில இளைஞா் விருதுக்கான பாராட்டு சான்றிதழ், ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, தூத்துக்குடி ஆட்சியரை சந்தித்து, சரவணக்குமாா் வாழ்த்து பெற்றாா். நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஜெயரத்தினராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments